கொரோனாவில் இருந்து சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்தும் மீட்சி

கொவிட்–19 வைரஸ் தொற்றில் இருந்து சீன பொருளாதாரம் தொடர்ச்சியாக மீட்சி பெற்று வருவது அந்நாட்டின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரம் மூலம் உறுதியாகியுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவில் இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஜூலை மற்றும் செப்டெம்பர் வரையான காலாண்டில் 4.9 வீத பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது. எனினும் இது பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்த 5.2 வீதத்தை விடவும் குறைவாகவே உள்ளது.

சீனாவின் அண்மைய மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவு அடிப்படையில் பொருளாதார மீட்சியில் உலகில் அந்த நாடு முன்னிலையில் உள்ளது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்த நிலையில் சீன பொருளாதாரம் 6.8 வீத அளவு குறைந்தது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டிருந்தன.

1992ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை சீனா பதிவு செய்ய ஆரம்பித்ததில் இருந்து முதன்முறையாக சீன பொருளாதாரம் அப்போதுதான் பெரும் சரிவைச் சந்தித்திருந்தது.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை