பொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி

பொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது.

பதவி கவிழ்க்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறி இருக்கும் முன்னாள் ஜனாதிபதி எவோ மொராலஸின் கூட்டாளியான ஆர்ஸ், இரண்டாவது சுற்று தேர்தலை தவிர்க்க போதுமான அளவு வாக்குகளை வென்றிருப்பதாக இந்த முடிவுகள் காட்டுகின்றன.

தேசிய ஐக்கிய அரசு ஒன்றை தாம் அமைக்கப்போவதாக ஆர்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக மொராலஸ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது பொலிவியாவில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பை தவிர்த்து வெற்றி பெறுவதற்கு குறைந்தது 40 வீத வாக்குகளையும் நெருங்கிய போட்டியாளரை விடவும் 10 வீதத்திற்கு மேலும் பெறுதல் வேண்டும்.

ஆர்ஸ் ஏற்கனவே தாம் வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கும் நிலையில் பொலிவியாவில் ஜனநாயகம் மீட்சி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆர்ஸ் முன்னர் மொராலஸ் அரசில் பொருளாதார அமைச்சராக இருந்தவராவார்.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை