பிரான்சில் தலை துண்டிக்கப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக பேரணி

பிரான்ஸில் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆயிரக்கணக்கானோர் பேரணிகளை நடத்தியுள்ளனர்.

ஆசிரியர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல நகரங்களில் திரண்ட கூட்டத்தினர் மெளன அஞ்சலி செலுத்தியதுடன் கைதட்டவும் தேசிய கீதத்தைப் பாடவும் செய்தனர்.

நாட்டை உலுக்கிய கொலைச் சம்பவத்தைக் கண்டித்து நடத்தப்பட்ட பேரணியில் பிரதமர், கல்வியமைச்சர் இருவரும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

47 வயது வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெட்டி 18 வயது இளைஞரால் பாடசாலைக்கு வெளியில் கொல்லப்பட்டார்.

பேச்சு சுதந்திரம் பற்றிய வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை அவர் காட்டியதால், சில இஸ்லாமியப் பெற்றோர் கோபமடைந்ததாகக் கூறபட்டது.

ரஷ்யாவில் பிறந்த செச்னியப் பூர்விகத்தைக் கொண்ட இளைஞர், சம்பவத்திற்குப் பின்னர் பொலிஸ் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலையின் தொடர்பில் 11 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணிந்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் நாட்டின் சுதந்திரம், சமத்துவம், ஒற்றுமையைத் தற்காப்பதாகக் கூறினர்.

கொலைச் சம்பவத்திற்கு முன் சமூக ஊடகத்தில் பெட்டிக்கு எதிராகப் பல பதிவுகள் இடம்பெற்றிருந்தன. ஆசிரியர்களை மிரட்டல்களில் இருந்து பாதுகாப்பதற்கான உத்தியை அராசங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை