இஸ்ரேல் – பஹ்ரைன் இராஜதந்திர உறவு ஆரம்பம்

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து இஸ்ரேல் மற்றும் பஹ்ரைனுக்கு இடையே நேற்று இராஜதந்திர உறவு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இந்த இரு தரப்புக்கும் இடையே இராஜதந்திர உறவு கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பஹ்ரைன் சென்றிருக்கும் இஸ்ரேலிய தூதுவர்கள் மற்றும் பஹ்ரைன் அதிகாரிகள் முழு இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் நேற்று கைச்சாத்திட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்மூலம் இஸ்ரேல் மற்றும் பஹ்ரைனுக்கு மற்றைய நாட்டில் தூதரகம் திறப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய அரபு இராச்சியமும் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர இஸ்ரேல் மற்றும் பஹ்ரைனுக்கு இடையில் பொருளாதார கூட்டுறவு உட்பட ஆறு தொடக்கம் எட்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இஸ்ரேலுடனான வளைகுடா நாடுகளின் இராஜதந்திர உறவை பலஸ்தீனர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

Mon, 10/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை