டிரம்பின் மகனுக்கும் வைரஸ் தொற்றியது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 14 வயது மகன் பெரோனுக்கு வைரஸ் தொற்று இருந்ததாக முதல் பெண்மணி மிலேனியா டிரம்ப் கூறியுள்ளார்.

பெற்றோர் இருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பெரோனுக்கும் நோய் இருப்பது தெரியவந்தது.

அவருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்றும் பெரோனுக்குத் தற்போது வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் மிலேனியா டிரம்ப் கூறினார். தமக்கும் நோய்த்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கூடிய விரைவில் பணிக்குத் திரும்ப எண்ணுவதாகத் தெரிவித்தார்.

Fri, 10/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை