சூடானை ‘தீவிரவாத’ பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்கா திட்டம்

சூடான் 335 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கினால் அந்நாட்டை தீவிரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்திருக்கும் சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டொன், நிதி பரிமாற்றப்பட்டதாகவும் அமெரிக்கா உடன் அதனை உறுதி செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சூடான் அரசின் விருந்தாளியாக அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லாடன் அங்கு வாழ்ந்து வந்த 1993 ஆம் ஆண்டு தொடக்கம் சூடான் இந்தப் பட்டியலில் உள்ளது.

ஆபிரிக்காவில் அமெரிக்க தூதரகங்கள் மீது 1998 ஆம் ஆண்டு அல் கொய்தா நடத்திய குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டே இழப்பீடு கோரப்படுகிறது.

தன்சானியா மற்றும் கென்யாவில் உள்ள தூதரங்கள் மீது இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் 220க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களை அடுத்து சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் கடந்த ஆண்டு பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் அமெரிக்கா மற்றும் சூடானுக்கு இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Wed, 10/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை