ஐ.அ.இ – இஸ்ரேலுக்கு இடையே முதல் வர்த்தக விமானப் பயணம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இஸ்ரேலுக்கு இயக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் டெல் அவிவ் சென்றடைந்தது. எட்டிஹாட் ஏர்வேய்ஸ் விமானம் 9607 இஸ்ரேலின் பென்கூரியன் சர்வதேச விமானநிலையத்தில் கடந்த திங்கட்கிழமை காலை தரையிறங்கியது. இஸ்ரேல் சுற்றலா பிரதிநிதிகளை ஏற்றியே அபூதாபியில் இருந்து அந்த விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது.

“இஸ்ரேலுக்கு பயணிகள் விமானம் ஒன்றை இயக்கிய முதல் வளைகுடா விமானசேவையாக எட்டிஹாட் பதிவாகியுள்ளது. இது ஆரம்பம் மாத்தரமாகும்” என்று அந்த விமானசேவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இரு தரப்புக்கும் இடையே தொடர்ச்சியான விமான சேவையை ஆரம்பிக்கவிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையே இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் ஒப்பந்தம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த மாதம் இடம்பெற்றது.

அது தொடக்கம் இரு தரப்புக்கும் இடையிலான உறவுகள் அதிகரித்திருப்பதோடு அதன் தொடர்ச்சியாக வர்த்தக விமானப் பயணங்கள் தொடர்பில் நேற்று உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்தானது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே வீசா இன்றி பயணிப்பதற்கான உடன்படிக்கையும் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 10/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை