இலங்கை கால்பந்து குழாத்தின் பயிற்சியை புதிய வடிவங்களில் நடத்துவதற்குத் திட்டம்

தற்போது இடைநிறுத்தப்பட்டிருக்கும் தேசிய கால்பந்து குழாத்தின் பயிற்சிகள் வேறு அமைப்பில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்ப குழு தலைவர் ரோஹித்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அவசர நிலை தணிந்த பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் தேசிய கால்பந்து பயிற்சிக் குழாத்திற்காக புதிய வீரர்களையும் அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதத்தில் முடிவடைந்த தலைவர் கிண்ண கால்பந்து போட்டியில் பரிந்துரைக்கப்பட்ட ஒன்பது பேர் அதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ரோஹித்த பெர்னாண்டோவின் தலைமையில் கால்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்ப குழுவுக்கு தேசிய கால்பந்து பயிற்சியாளர் அமீர் எலஜிக் மற்றும் முன்னாள் கால்பந்து பயிற்சியாளர்களான டட்லி ஸ்டென்ட்வோல்ட், சம்பத் பெரேரா, இளையோர் அணி பயிற்சியாளர் சமிந்தஸ்டென்வோல் மற்றும் காமினி மதுராவல ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

கொவிட்–19 தொற்றுக்கு மத்தியில் தேசிய கால்பந்து சம்மேள பயிற்சிக்கு பல தடவைகள் தடங்கல் ஏற்பட்டது. கோட்டே ‘பெத்தேகம’ தேசிய கால்பந்து அபிவிருத்தி நிலையத்தில் வதிவிட பயிற்சியை நடத்தி சென்றபோதும் இந்த மாதத்தில் கொரோனா வைரஸ் பரவியபோது வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

மேலும் சர்வதேச கால்பந்து தரப்படுத்தலுக்கு அமைய இலங்கை தொடர்ந்து 206 ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு ஓர் ஆண்டுக்கு முன் இலங்கை 205 ஆவது இடத்தில் இருந்தபோது இலங்கையின் கால்பந்து பயிற்சியாளராக ரூமி பக்கீர் அலி செயற்பட்டார். இலங்கை கடைசியாக பங்கேற்ற சர்வதேச கால்பந்து போட்டியில் பங்களாதேஷிடம் 3–0 என தோல்வியை சந்தித்தது.

தேசிய கால்பந்து குழாத்தின் வதிவிட பயிற்சி ஆரம்பிக்கப்பட்ட பின் 23 வயதுக்கு உட்பட்ட குழாம் ஒன்றை நடத்திச் செல்வதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் எதிர்பார்த்துள்ளது. தேசிய குழாத்தின் எதிர்கால வதிவிட பயிற்சிக்காக இலங்கையில் அழைப்புக் கிடைத்த ஐரோப்பாவில் தற்போது விளையாடுகின்ற இலங்கையர்கள் சிலரும் பங்கேற்பதற்கு தயாராகி இருப்பதாக கால்பந்து சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே தொழில்நுட்ப குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய திட்டத்திற்கு அமைய இலங்கையில் வதிவிட வெளிநாட்டு பயிற்சியாளருக்காக எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் செயற்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும்.

அதன்போது 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து சம்பியன்சிப் தொடரில் இலங்கை அணி குறைந்தபட்சம் அரையிறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதே தொழில்நுட்பக் குழுவினால் அவருக்கு வழக்கப்படும் இலக்காகும். அமீர் எலஜிக்கின் சேவை இலங்கைக்கு எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை