Header Ads

1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு

பெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டதாக நம்பப்படும் பிரமாண்ட ஓவியங்கள் யுனெஸ்கோ மரபுரிமை சொத்துகளாக உள்ளன. இதில் இந்த பூனையின் ஓவியம் தற்போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செங்குத்தான சரிவு ஒன்றில் இருப்பதால் பார்ப்பதற்கு பயங்கரமாக உள்ள இந்தக் காட்சி இத்தனை காலமும் தென்படாமல் இருந்ததாக பெரு கலாசார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 37 மீற்றர் (120 அடி) நீளமான இந்த ஓவியம் கடந்த வாரம் சுத்தம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டதாகவும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

பெரு நாட்டின் தென்பகுதியில் பாலைவன பீடபூமியில் வரையப்பட்டிருக்கும் இந்த பிரமாண்ட ஓவியங்கள் நாஸ்கா இந்தியர்களால் 1500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதாகும். கி.பி. 400 இலிருந்து கி.பி. 650 வரையுள்ள காலகட்டத்தில் வரையப் பட்டதென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.