அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வின்ஸ்டார் அணி கிரிக்கெட் சம்பியன்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த விளையாட்டு விழாவையொட்டி நடாத்தப்பட்ட, மட்டுப்படுத்தப்பட்ட 10 ஓவர்கள் பந்து வீச்சினைக் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வின்ஸ்டார் அணியினர் வெற்றியீட்டி, சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நலன்புரிச் சங்கத் தலைவர் டாக்டர் ஏ.சி.அப்துல் ரஸ்ஸாக் தலைமையில் நடைபெற்ற இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மொத்தம் நான்கு அணிகள் பங்குபற்றின.

டொர்னாடோ அணியினர் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டனர். டொர்னாடோ அணியினர் முதலில் துடுப்பாடினர். அவர்கள் 10 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து மொத்தம் 71 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பாடிய வின் ஸ்டார் அணியினர் 6 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். நலன்புரிச் சங்கத் தலைவர் டாக்டர் ஏ.சி.அப்துல் ரஸ்ஸாக் தலைமையில் நடைபெற்ற இறுதி பரிசளிப்பு நிகழ்வில், வெற்றி வீரர்கள் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவி, ஒத்துழைப்பு நல்கிய அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம்.ஜவாஹிர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு நலன்புரிச் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Sat, 10/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை