வடக்கு சைப்ரஸ் தேர்தலில் துருக்கி ஆதரவாளர் வெற்றி

துருக்கி கட்டுப்பாட்டு வடக்கு சைப்ரஸ் ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி தேசியவாதியான எர்சின் டாடர் வெற்றிபெற்றுள்ளார்.

துருக்கி ஆதரவுடையவரான டாடர் மத்தியதரைக்கடல் தீவான சைப்ரஸை இரண்டு நாடுகளாக பிரிக்க விரும்புபவராவார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 52 வீத வாக்குகளை பெற்று எதிர்பாராத வெற்றி ஒன்றை பதிவு செய்துள்ளார். அவரது போட்டியாளரான பதவியில் உள்ள ஜனாதிபதி முஸ்தபா அகின்சி, அந்தத் தீவின் கிரேக்கப் பகுதியுடன் ஒன்றிணைவதற்கு ஆதரவானவராவார்.

சைப்பரஸில் கிரேக்கத்தின் ஆதரவில் இராணுவ சதிப்புரட்சி ஒன்று இடம்பெற்றதை அடுத்து துருக்கி அதன் வடக்கு பகுதியை ஆக்கிரமித்த 1974 ஆம் ஆண்டு தொடக்கம் அந்த நாடு இரண்டாக பிளவுபட்டு காணப்படுகிறது.

அந்த தீவின் வடக்கில் துருக்கிய சைப்ரஸ் அரசு ஒன்று ஆட்சியில் இருப்பதோடு தெற்கின் மூன்றில் இரண்டு பகுதி கீரேக்க சைப்ரஸ் தலைமையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் நிர்வாகத்தில் உள்ளது. இதில் சுமார் 300,000 மக்கள் தொகை கொண்ட வடக்கு வைப்ரஸ் துருக்கி குடியரசை துருக்கி மாத்திமே ஒரு சுதந்திரம் பெற்ற நாடாக அங்கீகரிப்பதோடு ஏனைய உலக நாடுகள் அதனை சைப்ரஸின் ஓர் அங்கமாகவே கருதுகிறது.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை