Header Ads

இன்று விண்கல்லில் இறங்கும் விண்கலம்

பென்னு என்ற விண்கல்லை இன்று செவ்வாய்க்கிழமை தொடுவதற்கு எதிர்பார்த்திருக்கும் நாசா, அதில் விண்வெளிப் பாறைகளின் மாதிரிகளை 2023 ஆம் ஆண்டு பூமிக்கு எடுத்துவர திட்டமிட்டுள்ளது.

இதன்படி ஒசிரிஸ்–ரெக்ஸ் என்ற விண்கலம் மிகக் கவனமாக திட்டமிடப்பட்டு 4.5 மணி நேரங்களில் கீழிறங்கி பென்னு விண்கல்லை சிறிது வினாடிகள் தொடவுள்ளது.

இதன்போது இந்த விண் கல்லின் வட துருவத்தில் ஒரு வேன் வண்டியின் அளவு கொண்ட விண்கலம் அதன் மேற்பரப்பில் மாதிரிகளை சேகரித்து சேமித்து பூமிக்கு திரும்பவுள்ளது. பூமிக்கான அதன் பயணத்திற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூமி மற்றும் செவ்வாய்க் கிரகத்திற்கு இடையே இருக்கும் பென்னு விண்கல் எமது பூமியில் இருந்து சுமார் 207 மில்லியன் மைல்கள் தொலைவில் காணப்படுகிறது.

இந்த விண்கல்லில் இருந்து பெறப்படும் மாதிரிகளைக் கொண்டு கிரகங்கள் மற்றும் உயிர்களின் தோற்றம் பற்றி புரிதலை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.