வீரமுனை விநாயகர் மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டி

களுவாஞ்சிக்குடி மெக்ஸ் அணி சம்பியன்

வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் களுவாஞ்சிக்குடி மெக்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது. 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 08பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அம்பாரை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 60 மேற்பட்ட அணிகள் பங்குபற்றி இறுதிப் போட்டிக்கு சம்மாந்துறை யுனிட்டி விளையாட்டுக் கழகமும், களுவாஞ்சிக்குடி மெக்ஸ் விளையாட்டுக் கழகமும் தெரிவானது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சம்மாந்துறை யுனிட்டி விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்படுத்தாடி 5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 26 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய களுவாஞ்சிக்குடி மெக்ஸ் விளையாட்டுக் கழகம் 4.5ஒவர் நிறைவில் 04 விக்கெட்களை இழந்து வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

வெற்றிபெற்ற களுவாஞ்சிக்குடி மெக்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு முப்பதாயிரம் ரூபாய் காசோலையும் வெற்றிக் கிண்ணமும், இரண்டாம் இடத்தைப் பெற்ற சம்மாந்துறை யுனிட்டி விளையாட்டுக் கழகத்திற்கு பதினைந்தாயிரம் ரூபாய் காசோலையும் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.

 

(சவளக்கடை குறூப் நிருபர்)

Thu, 10/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை