கறுப்பினத்தவரின் கொலை: பிலடெல்பியாவில் ஊரடங்கு

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கறுப்பின இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் அந்த நகரில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட வோல்டர் வொல்லஸ் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் கையில் வைத்திருந்த கத்தியை கிழே போட மறுத்ததை அடுத்தே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதோடு நகரின் வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்நிலையில் அந்த நகர் முழுவதும் கடந்த புதன்கிழமை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

நகரில் பென்சில்வேனியா தேசிய காவல் படையினர் மற்றும் மேலதிக பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 30 அதிகாரிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் பிடியில் ஜோர்ஜ் பிளொயிட் என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கு எதிராக இந்த ஆண்டு ஆரம்பத்திலும் பிலடெல்பியாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

Fri, 10/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை