அரசுக்கு 'கொவிட் 20' நோய் பீடித்திருக்கிறதாம்

மனோ கணேசன் எம்.பி கூறுகிறார்

நாட்டில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தை கொவிட் 20 நோய் பீடித்திருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மனோ எம்பி இவ்வாறு கூறியுள்ளார்.

அரசிற்கு உள்ளே இப்போது 20 திருத்தம் தொடர்பில் பெரும் கலகம் நடைபெறுகிறது. எதிரணியில் நாம் இதை எதிர்ப்பதை போன்று அரசுக்குள்ளிருந்து பலர் இதற்கு எதிராக குரல் எழுப்ப தொடங்கி விட்டனர்.

அமைச்சர்கள் விதுர விக்கிரமநாயக்க, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளனர். ஜனாதிபதிக்கு நெருக்கமான எம்பி கேவிந்து குமாரதுங்கவும் இதை எதிர்க்கிறார்.

விஜயதாச ராஜபக்ஷ எம்.பி இப்போது இரண்டாவது முறை 20 திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பதில் இல்லை. அரசுக்கு ஆதரவு அளித்த பல தேரர்கள், சமூக தலைவர்கள் எதிர்க்குரல் எழுப்புகின்றனர். இதுதான் இன்று அரசை பிடித்துள்ள கோவிட்- 20 நோயாகும். அரசை பீடித்துள்ள இந்த “கொவிட்- 20” நோய்க்கு மருந்து தேடக்கூடாது. ஏனெனில் கொவிட்-19 ஐப் போல் இந்த நோய்க்கும் மருந்தில்லை என்றார்.

 

Thu, 10/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை