200 யெமனிக்களுக்கு பகரமாக அமெரிக்கர் இருவர் விடுதலை

ஓமான் நாட்டின் பிடியில் இருந்த 200க்கும் அதிகமான ஹூத்தி ஆதரவாளர்களுக்கு பதிலாக யெமனில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த இரு அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மூன்று ஆண்டுகள் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மனிதாபிமான பணியாளர் சான்ட்ரா லொலி மற்றும் ஓர் ஆண்டு காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த வர்த்தகரான மைக்கல் கிடாடா ஆகியோரே விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் உயிரிழந்த மூன்றாவது அமெ ரிக்கரான பிலால் பாடீனின் உடலையும் கிளர்ச்சியாளர் அமெரிக்காவிடம் அளித்துள்ளனர்.

இந்த இருவரும் யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மறுபுறம் ஓமானில் இருந்து 200க்கும் அதிகமான மெனியர்கள் நாடு திரும்பியதாக ஹுத்திகள் அறிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் ஓமானில் நிர்க்கதியானவர்களாவர்.

யெமனில் ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சவூதி அரேபியா ஆதரவு கொண்ட அரசுக்கு இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது.

Fri, 10/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை