சீனாவின் மற்றொரு ஒட்டுமொத்த நகர மக்களிடமும் ‘கொவிட் − 19’ சோதனை

சீனாவின் வடமேற்கு மாநிலமான சின்சியாங்கில் சுமார் 130 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த நகரில் இருப்பவர்கள் மீதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அங்கு 17 வயதுத் தொழிற்சாலை ஊழியருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

அதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் காஷ்கார் பகுதியில் 4.75 மில்லியன் மக்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எவரிடமும் அதற்கான அறிகுறிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவருமே அந்தப் பதின்ம வயதுப் பெண்ணும் அவரது பெற்றோரும் பணியாற்றும் தொழிற்சாலையோடு தொடர்புடையவர்களாவர்.

இந்நிலையில் கஷ்கார் நகரில் பாடசாலைகள் மூடப்பட்டு, நோய்த் தொற்று இல்லை என்று உறுதியாகும் வரை குடியிருப்பாளர்கள் நகரை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடாக சீனா இருந்தபோதும் அங்கு சிறு சிறு தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதில் சின்ஜியாங் பிராந்தியம் உய்குர் சிறுபான்மை முஸ்லிம்களின் தாயகமாக உள்ளது. இங்கு சீன அரசு பாகுபாட்டை கையாண்டு வருவதாக உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில் கஷ்கார் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2.8 மில்லியன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு அடுத்த இரண்டு நாட்களில் எஞ்சிய குடியிருப்பாளர்கள் மீதும் சோதனை நடத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோன்று கடந்த ஒக்டோபர் ஆரம்பத்தில் குவான்டோ நகரின் ஒட்டுமொத்த மக்களான ஒன்பது மில்லியன் பேர் மீது கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று ஆரம்பித்த சீனாவின் வுஹான் நகரில் கடந்த மே மாதத்தில் 11 மில்லியன் பேருக்கு சோதனை நடத்தப்பட்டது.

 

Tue, 10/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை