அரசியலமைப்பை மாற்ற சிலி மக்கள் பெரும் ஆதரவு

சர்வாதிகாரி ஜெனரல் அகஸ்டோ பினோசே காலத்தின் அரசியலமைப்பை மாற்றி எழுதுவதற்கு சிலி நாட்டின் அதிகப் பெரும்பான்மை மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் அரசியலமைப்பை மாற்றுவதற்கு 78 வீதம் வாக்காளர்கள் ஆதரவளித்துள்ளனர். நாட்டில் ஏற்றத்தாழ்வுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களை அடுத்தே இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிலியில் 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஜெனரல் பினோசேவினால் 1980ஆம் ஆண்டிலேயே தற்போதைய அரசியலமைப்பு வரையப்பட்டது. அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஒடுக்குமுறை, சித்திரவதை மற்றும் காணாமல்போதல் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றன.

“இன்று வதை அரசியலமைப்பு எம்மை பிளவுபடுத்தி இருந்து” என்று சிலியின் தற்போதைய ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா தெரிவித்தார்.

 

Tue, 10/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை