தடுப்பு மருந்தை பயன்படுத்துவதில் உலகளாவிய ஒற்றுமைக்கு அழைப்பு

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் எதிர்காலத்தில் எந்தவொரு தடுப்புமருந்து பயன்பாட்டுக்கு வந்தாலும் அதில் உலகளாவிய ஒருமைப்பாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஒவ்வொரு நாடும் தடுப்புமருந்துப் பயன்பாட்டில் குறுகிய மனப்பான்மையோடு நடந்துகொண்டால் அது நோய்ப்பரவலை நீட்டிக்குமே தவிர, குறைக்காது என அவர் எச்சரித்தார்.

உலக சுகாதார அமைப்பின் கொவெக்ஸ் தடுப்புமருந்துத் திட்டம் ஒன்றுதான் இப்போது, வளரும் நாடுகளுக்கான தடுப்பு மருந்தை வழங்கும் உலகளாவிய ஒரே திட்டமாக உள்ளது.

180 உறுப்பு நாடுகள் ஆதரிக்கும் அந்தத் திட்டத்தின் மூலம், 2 பில்லியன் முறை போடப் போதுமான தடுப்புமருந்தை உற்பத்தி செய்ய நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய 20 வீதத்தினருக்கு தடுப்புமருந்தை வழங்க அது நம்பிக்கை கொண்டுள்ளது.

சீனாவில் தயாராகும் 2 தடுப்புமருந்துகள் உட்பட, கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் 9 தடுப்புமருந்துகள் சோதிக்கப்பட்டு வருகின்றன.

Tue, 10/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை