கொவிட்–19: இத்தாலியில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இத்தாலியில் கட்டுப்பாடுகளை இறுக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முகக்கவசம் அணிந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அந்நாட்டு பிரதமர் குயிசெப்பே கொண்ட்டே, புதிய முடக்க நிலையை தவிர்ப்பதற்கு இந்தக் கட்டுப்பாடுகள் அவசியம் என்று தெரிவித்தார்.

இதன்படி இரவு ஒன்பது மணிக்கு பின்னர் பொது இடங்களை மூடும் அதிகாரம் மற்றும் உணவு விடுதிகள் திறப்பது மற்றும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் அதிகாரம் நகர மேயர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் கடந்த சனிக்கிழமை 10,925 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவான நிலையில் அதனை விஞ்சும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11,705 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நோய்த் தொற்றின் ஆரம்பத்தில் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்தது. அங்கு உறுதி செய்யப்பட்ட மொத்த நோய்த் தொற்று சம்பவங்கள் 414,000 ஆகவும் உயிரிழப்பு 36,500 ஆகவும் அதிகரித்துள்ளது.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை