கொவிட்-19: பிரேசிலில் 150,000 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 150,000ஐ தாண்டி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் அதிக உயிரிழப்பு பதிவான நாடாக பிரேசில் இருப்பதோடு அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அடுத்து அதிக நோய்த் தொற்றுக் கொண்ட நாடாகவும் உள்ளது. ஒரு சில தினங்களுக்கு முன்னர் பிரேசிலில் நோய்த் தொற்று சம்பவங்கள் ஐந்து மில்லியனைத் தாண்டியது. எனினும் கடந்த சில வாரங்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு குறைந்து வருகிறது.

பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சோனாரோ, கடந்த ஜூலை மாதம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னரும் கூட, அதன் தீவிரத்தைப் பற்றி அவர் பெரிதுபடுத்தவில்லை. ஆளுநர்களும் மேயர்களும் விதித்த முடக்கங்களை நிராகரித்ததோடு, கூட்டங்களிலும் பாதுகாப்பு இடைவெளி தொடர்பான விதிமுறைகளை அவர் கண்டுகொள்ளவில்லை.

Mon, 10/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை