Header Ads

நடுவானில் விமானங்கள் மோதி ஐவர் உயிரிழப்பு

பிரான்ஸில் இரு சிறு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகினர்.

தென் கிழக்கு நகரான டுவர்ஸ் வானுக்கு மேலால் கடந்த சனிக்கிழமை இந்த விபத்து நேர்ந்தது. இதனை அடுத்து சுமார் 50 தீயணைப்புப் படையினர் உட்பட அவசர சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விமானங்கள் கீழே விழுந்ததில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதில் இரண்டு பேரை ஏற்றிச் சென்ற சிறு விமானம் வீடொன்றின் வேலியில் வந்து விழுந்துள்ளது. அதனை விடவும் சற்று பெரிய விமான மனிதர்கள் இல்லாத இடம் ஒன்றில் விழுந்துள்ளது.

நடுவானில் சிறு விமானங்கள் இரண்டு மோதுவது மிக அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் 1998 ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற இது போன்ற ஒரு விபத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

Mon, 10/12/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.