பாலினத்தை குறிக்காத வார்த்தைகள் பயன்பாடு

ஜப்பான் ஏர்லைன்சில்:

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தினுள் செய்யப்படும் அறிவிப்புகளிலும் விமான நிலைய அறிவிப்புகளிலும் பாலினத்தைக் குறிக்காத வாழ்த்துகளைப் பயன்படுத்தப்போவதாகக் கூறியுள்ளது.

அந்தப் புதிய மாற்றம் அடுத்த மாதத்திலிருந்து நடப்புக்கு வரவுள்ளது. ஆண், பெண் இரு பாலினங்களை மட்டும் குறிக்கும் சொற்றொடர்களுக்குப் பதிலாக “காலை வணக்கம்”, “மாலை வணக்கம்”ஆகிய வாழ்த்துகளை அது பயன்படுத்தும்.

ஜப்பானிய மொழியில் ஏற்கனவே அறிவிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் பாலினத்தைக் குறிப்பதில்லை. இனி அந்த மாற்றம் ஜப்பான் ஏர்லைன்ஸின் மற்ற மொழி அறிவிப்புகளுக்கும் பொருந்தும்.

ஜப்பானில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படுவதில்லை. இருப்பினும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்குக் கொடுக்கப்படும் உரிமைகளை அந்நாட்டு அரசாங்கம் அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை