ஐந்து குற்றவாளிகளின் மரண தண்டனை நீக்கம்

ஜமால் கசோக்கி கொலை

2018இல் ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பில் ஐவருக்கான மரண தண்டனையை சவூதி அரேபிய நீதிமன்றம் ஒன்று திரும்பப் பெற்றுள்ளது.

கொல்லப்பட்ட அந்த ஊடகவியலாளரின் குடும்பத்தினர் மன்னிப்பு அளித்ததால் அவர்களின் தண்டை தலா 20 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாக அரச வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் முழுமையான கேலிக்கூத்தாக உள்ளது என்று கசோக்கியை திருமணம் முடிக்க காத்திருந்த ஹடிஸ் சென்கிஸ் தெரிவித்துள்ளார்.

சவூதி அரசை விமர்சிப்பவராக இருந்த கசோக்கி துருக்கியின் ஸ்தான்பூல் நகரில் இருக்கும் சவூதி துணைத் தூதரகத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.

இந்த ஊடகவியலாளர் கொல்லப்பட்டது முரட்டுத்தனமான நடவடிக்கை என்று குறிப்பிட்ட சவூதி அரசு, அது தொடர்பில் பெயர் வெளியிடாத 11 பேர் மீது வழக்கு விசாரணை நடத்தியது.

எனினும் இந்த வழக்கு விசாரணையை நீதிக்கு எதிரானது என்று நிராகரித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அக்னஸ் கல்லமார்ட், இந்தக் கொலை சவூதி அரசு பொறுப்புக் கூறவேண்டிய முன்கூட்டித் திட்டமிடப்பட்ட ஒன்று என்று தெரிவித்தார்.

“வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை, சட்டத்திற்கும் நெறிமுறைகளுக்கும் உட்படவில்லை. அது, வெளிப்படையற்ற, நியாயமற்ற நடைமுறைக்குப் பின் அறிவிக்கப்பட்டது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை