கொரோனாவால் மெக்சிகோவில் மரண சான்றிதழுக்கு தட்டுப்பாடு

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணச் சான்றிதழ் படிவங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து பத்து இலட்சத்திற்கும் அதிகமான புதிய படிவங்கள் அச்சடிக்கப்படவுள்ளன.

நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மெக்சிகோ மாநிலம், அதேபோன்று மெக்சிகோ சிட்டி மற்றும் பாஜா கலிபோர்னியா மாநிலங்களில் வழக்கத்தை விடவும் அதிக உயிரிழப்புகள் பதிவாவதால் மரணச் சான்றிதழ்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பெருந்தொற்றை கையாளும் அரச செயற்பாட்டுக்கு தலைவராக இருக்கும் பிரதி அமைச்சர் ஹுகோ லோபஸ் தெரிவித்துள்ளார்.

இதில் பாஜா கலிபோர்னியாவில் இந்தப் படிவங்கள் முற்றாக தீர்ந்திருப்பதோடு மெக்சிகோ மாநிலம் மற்றும் மெக்சிகோ சிட்டியில் குறைந்து வருகிறது.

போலியாக தயாரிப்பதை தவிர்க்கும் வகையில் இந்தப் படிவங்கள் தனித்துவத்துடன் அச்சடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் நான்காவது இடத்தில் இருக்கும் மெக்சிகோவில் 66,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எனினும் மருத்துவ சோதனைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதால் இதன் உண்மையான எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் அதிகமாக இருக்கும் என்று அரசு மற்றும் சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை