இஸ்ரேல் விமானங்களுக்கு சவூதி அரேபியா அனுமதி

இஸ்ரேலிய விமானங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வரும் மற்றும் செல்கின்ற எந்த ஒரு விமானத்திற்கும் தமது வான்பகுதியில் அனுமதி அளிக்கப்படும் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் முதல் நேரடி விமானப் பயணத்திற்குப் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியம் விடுத்த கோரிக்கையை அடுத்தே சவூதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பெரும் திருப்புமுனை என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

“எமது நாட்டின் சுற்றுலா மற்றும் அபிவிருத்திக்கு வழிவகுப்பதாக விமானப் பயணங்கள் குறுகியதாகவும் மலிவானதாகவும் அமையும்” என்று நெதன்யாகு தெரிவித்தார்.

எனினும் விமானங்களுக்கு அனுமதி அளிக்கும் இந்த முடிவினால் பலஸ்தீன அபிலாசைகள் தொடர்பான நாட்டின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று சவூதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் பர்ஹான் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை