மற்றொரு கறுப்பினத்தவர் பொலிஸார் பிடியில் பலி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பொலிஸாரின் தாக்குதலில் மற்றொரு கறுப்பினத்தவர் உயிரிழந்துள்ளார்.

மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 41 வயது டனியேல் ப்ரூடோ கடந்த மார்ச் மாதம் பொலிஸாரால் தடுக்கப்பட்டு அவரது தலையில் முகக்கவசம் அணியப்பட்டு அவரது கழுத்துப் பகுதி அழுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தபோதும் இந்த சம்பவம் தற்போதே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் உலகெங்கும் இனவெறிக்கு எதிரான சீற்றத்தை ஏற்படுத்திய ஜோர்ஜ் பிளோயிட் என்ற கறுப்பினத்தவரின் மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னரே இவர் இறந்துள்ளார். மின்னசோட்டாவில் கடந்த மே மாதம் பொலிஸார் பிளோயிட்டின் கழுத்தை சுமார் எட்டு நிமிடங்கள் காலால் இறுக்கிப் பிடித்ததை அடுத்தே அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் கடந்த ஓகஸ்ட் 23 ஆம் திகதி ஜகொப் பிளோக் என்ற மற்றொரு கறுப்பினத்தவர் மீது பொலிஸார் பின்புறமாக ஏழு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது அமெரிக்காவில் புதிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளது.

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை