எத்தியோப்பிய நாட்டுக்கான அமெரிக்க உதவி நிறுத்தம்

நைல் நதி அணை விவகாரம்:

நைல் நதியில் சர்ச்சைக்குரிய பாரிய அணையை கட்டும் எத்தியோப்பியாவுக்கான 100 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

எகிப்து மற்றும் சூடானுடன் உடன்படிக்கை ஒன்றை எட்டும் முன்னரே எத்தியோப்பியா இந்த அணையை நிரப்ப ஆரம்பித்ததே அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று நம்பப்படுகிறது.

நைல் நதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அபிவிருத்திப் பணியும் தமக்கு கிடைக்கும் நீரைக் குறைக்கும் என்று எகிப்து நீண்ட காலமாக கூறி வருகிறது.

எனினும் நாட்டின் மின்சாரத் தேவையை வழங்க இந்த அணை அவசியம் என்று எத்தியோப்பியா வலியுறுத்துகிறது. இதனால் ஆபிரிக்காவின் பலம் மிக்க நாடுகளான சூடான் மற்றும் எகிப்துடன் இது இராணுவ மோதல் ஒன்றுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஆபிரிக்க பிராந்தியம் ஒன்றின் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம் நேரடியாக தலையிடுவது வழக்கத்திற்கு மாறாக இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை