பிரபல ஹொலிவுட் நடிகரின் குடும்பத்திற்கே கொரோனா

உலகில் அதிகம் சம்பளம் பெறும் ஹொலிவுட் நடிகரான ட்வாயன் ஜோன்சன், தாமும் குடும்பத்தினரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வருவதாக அறிவித்துள்ளார்.

நெருங்கிய குடும்ப நண்பர்கள் மூலம் தமக்கும் தமது மனைவி மற்றும் இரு மகள்களுக்கும் கொரோனா தொற்றிய நிலையில் முகக்கவசம் அணியும்படியும் பெருந்தொற்றை அரசியலாக்குவதை தவிர்த்துக்கொள்ளும்படியும் தம்மை பின்பற்றும் 196 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

“ஒரு குடும்பமாக நாம் சந்தித்த மிகக் கடினமான, சவால் மிக்க ஒன்றாக இது இருந்தது” என்று ஜோன்சன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஹொலிவுட் திரையுலகம் நெருக்கடிக்கு உள்ளானதோடு அண்மையிலேயே அங்கு திரைப்படத் தயாரிப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. 48 வயது ட்வாயன் ஜோன்சன், அவரது 35 வயது மனைவி நான்கு மற்றும் இரண்டு வயது கொண்ட மகள்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இரண்டரை வாரங்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை