உலக சுகாதார அமைப்பின் நிலுவையை செலுத்தாமல் இருக்க அமெரிக்கா முடிவு

உலக சுகாதார அமைப்புக்கு வழங்க வேண்டிய 60 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிலுவைத் தொகையை செலுத்தப்போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அந்தத் தொகையை ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய பங்களிப்புகளுக்காக பயன்படுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றை கையாண்டது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு மீது குற்றம்சாட்டும் டிரம்ப் நிர்வாகம் அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்புக்கு 2020 ஆம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சுமார் 62 மில்லியன் டொலர் நிலுவையையும் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே கொவிட்–19 தடுப்பு மருந்து ஒன்றை மேம்படுத்தல் மற்றும் விநியோகிக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான திட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 09/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை