நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை

சப்ரகமுவ மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு மேல், மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடிமழை பெய்யும் என்றுஎதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்தில் பல இடங்களில் பிற்பகல்2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Wed, 09/23/2020 - 08:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை