அண்டர்சனின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது - குமார் சங்கக்கார

600விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் அண்டர்சனின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சன். 38வயதான அவர் சமீபத்தில் டெஸ்டில் 600விக்கெட் கைப்பற்றி சாதனை புரிந்தார்.

டெஸ்டில் 600விக்கெட் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அண்டர்சன் படைத்தார். ஒட்டு மொத்தத்தில் இந்த மைல் கல்லை தொட்ட 4-வது வீரர் ஆவார். சுழற்பந்து வீரர்களான முரளிதரன், வோர்னே, கும்ப்ளே ஆகியோர் 600விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.

இந்த நிலையில் அண்டர்சனின் 600விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், எம்.சி.சி. தலைவருமான சங்கக்கார தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- தற்போது மட்டுமல்ல எதிர் காலத்திலும் வேகப்பந்து வீரர்கள் யாரும் அண்டர்சனின் 600விக்கெட் சாதனையை முறியடிக்க முடியாது. அவர் ஒரு கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளார். அவரது இந்த சாதனையை யாராலும் நெருங்க முடியாது. இதனால் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக அவர் மட்டுமே இருப்பார் என்று கருதுகிறேன்.

தற்போது விளையாடும் வீரர்களில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 514 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவர் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்து வீரர்களில் 4-வது இடத்தில் உள்ளார்.

Wed, 09/02/2020 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை