குரங்குகளின் தட்டுப்பாட்டினால் தடுப்புமருந்து ஆய்வில் சிக்கல்

அமெரிக்காவில் கொவிட்–19 தடுப்பு மருந்துகளைச் சோதித்துப் பார்ப்பதற்குப் போதுமான குரங்குகள் இல்லாதது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்குகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொள்வது ஏற்கனவே சர்ச்சைக்குரிய, செலவுமிகுந்த ஒன்றாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.

ரீசஸ் வகைக் குரங்குகளே ஆராய்ச்சிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவதாக நியுயோர்க் போஸ்ட் பத்திரிகை தெரிவித்தது.

ஆனால் அந்த வகைக் குரங்குகள் முற்றிலும் காணாமல் போய்விட்டதாகவும், அவற்றை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் தலைவர் குறிப்பிட்டார்.

அவற்றுக்கான தேவை அதிகரித்ததோடு சீனாவிலிருந்து வரும் குரங்குகளின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 35,000 குரங்குகளில் 60 வீதம் சீனாவிலிருந்து வந்தவை. மேலும் கொவிட்–19 நோய் தொற்றிய குரங்குகள் உயிர் பாதுகாப்பு நிலை 3 எனப்படும் ஆய்வகங்களில் மட்டுமே வைக்கப்பட வேண்டும். ஆனால், அமெரிக்காவில் அந்த ஆய்வகங்களின் எண்ணிக்கை குறைவு.

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை