ஆப்கான் தலிபான் விடுதலை ஆரம்பம்

நூற்றுக்கணக்கான தலிபான் கைதிகளை விடுவிக்கும் சர்ச்சைக்குரிய நடவடிக்கையை ஆப்கான் அரசு ஆரம்பித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை தொடக்கம் ஆப்கான் நிர்வாகத்தால் 200 கைதிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாக தலிபான் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். மறுபுறம் ஆப்கான் இராணுவ கட்டளைத் தளபதிகள் நால்வரை தலிபான்கள் விடுவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானின்் 19 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைக்கான முன் நிபந்தனையாகவே தலிபான் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்ட ஒரு சில தினங்களுக்குள் கட்டாரில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2001ஆம் ஆண்டு அமெரிக்க படையெடுப்பை அடுத்து ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்ட தலிபான்கள் அது தொடக்கம் இல்லாத அளவுக்கு ஆப்கானின் அதிக நிலப்பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை