கொரோனா கடுமையை உணர்த்த வீதிகளில் சவப்பெட்டி ஊர்வலம்

இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் கடுமையைக் குடியிருப்பாளர்களுக்குத் தெளிவாக உணர்த்த தெருக்களில் காலியான சவப்பெட்டிகள் ஊர்வலம் சென்றன.

பாதுகாப்பு உடை அணிந்தவர்களும் பேய்களைப் போல வேடமிட்டவர்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஆசியாவில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகளை உணர்த்த ஊர்வலம் உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

சுமார் 100 முன்னிலை மருத்துவர்கள் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான சிறுவர்களும் நோய்க்குப் பலியானதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் கூறியது.

உலகின் நான்காம் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இந்தோனேசியாவில் 177,000க்கும் அதிகமானோர் நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

குறைவான எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யப்படும் இந்தோனேசியாவில், உண்மையான வைரஸ் தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

பொருளாதார சீர்குலைவைத் தடுக்க ஜூலை மாதத்தில் அரசாங்கம் அங்கு முடக்கநிலையைத் தளர்த்தியது.

முகக்கவசங்கள் அணிய மறுப்பவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டும் முயற்சி அவ்வளவாகக் கைகொடுக்கவில்லை.

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை