கிரேக்கத்தின் குடியேற்ற முகாம் தீயினால் அழிவு

லிஸ்போஸ் தீவில் அதிக மக்கள் நெரிசல் கொண்ட கிரேக்கத்தின் மிகப்பெரிய குடியெற்ற முகாம் தீயால் அழிந்துள்ளது.

இந்தத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடியதோடு அங்கிருக்கும் குடியேறிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீக்கான காரணம் தெரியவில்லை. எனினும் தீவின் வேறு பகுதியில் கடும் காற்றுக் காரணமாக காட்டுத் தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த குடியேற்ற முகாமில் சுமார் 13,000 பேர் வரை இருப்பதோடு அது அங்கு தங்க முடியுமான எண்ணிக்கையின் நான்கு மடங்காகும். இந்த முகாம் முற்றாக அழிந்துவிட்டது என்று லிஸ்போஸ் பிரதி ஆளுநர் அரிஸ் ஹட்சிகோம்னினோஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முகாமில் இருக்கும் குடியேறி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்தப் பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது. தற்போதும் இங்கு 35 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

லிஸ்போஸ் தீவு துருக்கி கடற்கரைக்கு அப்பால் இருப்பதோடு ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவை நாடி வரும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் நடமாட்டங்களின் மையப்புள்ளியாக இருந்து வந்தது.

Thu, 09/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை