சீனாவின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை

கட்டாயத் தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்திகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டி சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தின் முக்கிய ஏற்றுமதிகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

பருத்தி மற்றும் தக்காளி உற்பத்திகள் ஆகிய சீனாவின் பிரதான இரு ஏற்றுமதிகளும் இந்த தடைக்கு பரிந்துரைக்கப்பட்ட பண்டங்களில் அடங்குகின்றன.

சின்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சீனா மீது கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அண்மைய ஆண்டுகளில் சின்ஜியாங்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறிய விதி மீறல்களுக்காக விசாரணை இன்றி ஒரு மில்லியன்பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கணிக்கப்படுகிறது. இவர்கள் மறுகல்வி முகாம்களில் இருப்பதாக சீனா கூறுகிறது.

கட்டாயத் தொழிலாளர்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் கப்பல்களை கைப்பற்றுவதற்கு அனுமதிக்கும் ஆணையை தயாரிப்பதில் அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

எனினும் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தத் தடையானது அமெரிக்க சில்லறை விற்பனையாளர்கள், ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

Thu, 09/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை