கொவிட் –19: ஆசியாவில் 100,000 பேர் உயிரிழப்பு

ஆசியா முழுவதும் கொவிட் –19 வைரஸ் தொற்றால் 100,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் ஐந்தரை மில்லியன் பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகள் பலவற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. சில நாடுகளில் அவை மீண்டும் நடப்புக்கு வந்தன. மரண வீதத்தின் அடிப்படையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாவாகும். ஆசியாவில் உயிரிழந்த 100,000 பேரில் முக்கால்வாசிப் பேர் இந்தியர்கள்.

அங்கு 3.8 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 67,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் புதிதாகச் சுமார் 84,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. உலக அளவில் வேறெந்த நாட்டிலும் ஒரே நாளில் அவ்வளவு அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

Sat, 09/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை