சவூதியில் வெளிநாட்டு சுகாதார பணியாளருக்கு நீடிப்பு இல்லை

சவூதி அரேபியாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒப்பந்தம் நீடிக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.

மனிதவள சுகாதார அமைச்சகதின் துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட சுற்றறிக்கையை அடுத்து சவூதியில் முக்கிய மற்றும் தலைசிறந்த வல்லுநர்களைத் தவிர்த்து மற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு 10 அண்டுகளுக்கு மேல் ஒப்பந்தம் இல்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம், ‘சவூதியர்’ என்ற திட்டத்தின் கீழ் மற்ற நாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு பதில் 20 வீதம் சவூதி மக்களை மருத்துவம் மற்றும் சுகாதார பணிகளில் பணியமர்த்த முடிவெடுக்கப்பட்டது.

அந்த முடிவை நிறைவேற்றும் விதத்தில் முதற்கட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sat, 09/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை