பிரான்ஸில் கொரோனா தொற்று மீண்டும் உச்சம்

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போர் எண்ணிக்கையும் உயர்ந்ததாக அமைச்சு கூறியது.

வைரஸ் தொற்றால் நேற்று 20 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 4ஆவது நாளாக மரண எண்ணிக்கை ஈரிலக்கத்தில் பதிவானது. பிரான்ஸில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 300,000க்கும் அதிகம்; அவர்களில் சுமார் 30,700 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

Sat, 09/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை