15 ஆண்டுகள் ஆண் தொடர்பு இல்லாத பாம்பு முட்டையிட்டது

ஆண் மலைப்பாம்பு ஒன்றுடன் கடந்த 15 ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாத 62 வயதான மலைப்பாம்பு ஒன்று அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் 7 முட்டைகளை இட்டுள்ளது.

எனினும் ஆண் மலைப்பாம்புகள் இல்லாதபோதும் குறித்த இன மலைப்பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் என்று கூறப்படுகிறது. பொதுவாக மலைப்பாம்புகள் 30 முதல் 40 ஆண்டுகள் வரை மட்டுமே வாழக்கூடியவை. ஆனால், இந்த பாம்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட கூடுதலாக 22 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறது. இதன்மூலம் அதிக காலம் உயிர் வாழும் மலைப்பாம்பாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் இதே மிருகக்காட்சி சாலையில் மலைப்பாம்பு ஒன்று அதிகபட்சமாக 47 ஆண்டுகள் வாழ்ந்தது.

1961ஆம் ஆண்டு மிருகக்காட்சிசாலைக்கு கொண்டுவரப்பட்ட இந்த மலைப்பாம்புக்கு அப்போது வயது 3 என்று கூறப்பட்டது.

அதன் 7 முட்டைகளில் 2 மரபணு சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மூன்று முட்டைகள் இன்குபேட்டரில் வைத்து அடைகாக்கப்பட்டுள்ளன. இரண்டு முட்டைகள் அழிந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

Tue, 09/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை