Header Ads

அமெரிக்காவில் காட்டுத் தீயால் 1.6 மில். ஹெக்டர் நிலம் சேதம்

அமெரிக்காவின் ஒரேகன், கலிபோர்னியா, வொஷிங்டன் ஆகிய மாநிலங்களில் கடுமையாக எரிந்துவரும் காட்டுத்தீயால் 1.6 மில்லியன் ஹெக்டர் (16,000 சதுர கிலோமீற்றர்) பரப்பளவு சேதமடைந்துள்ளது.

ஓகஸ்ட் மாதத் தொடக்கத்தில் மூண்ட தீயில் ஆயிரக்கணக்கான வீடுகள் கருகின. குறைந்தது 33 பேராவது தீக்குப் பலியானதாகத் தெரிவித்த அதிகாரிகள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சுகின்றனர். கிட்டத்தட்ட 17,000க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடிவருகின்றனர். காட்டுத்தீ காரணமாக அடர்ந்த புகையும் சாம்பலும் காற்றின் தரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கலிபோர்னியா மாநிலப் பாதிப்புகளை நேரில் சென்று பார்த்தார். பருவநிலை மாற்றம் குறித்து பேசிய அவர், கட்டுத்தீ நிலவரம் மோசமடைந்ததற்கு மாநில ஆளுநர்களும் காரணம் என்று குறிப்பிட்டார்.

Tue, 09/15/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.