15 இல் 10 ஆண்டுகள் வரி செலுத்தாத டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தியதில்லை என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தகவல் அளித்துள்ளது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அவர் வெறுமனே 750 டொலர் வரியே செலுத்தி இருப்பதாக வரி வருவாய் தரவுகளை மேற்கோள்காட்டி அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்தத் தகவலை டிரம்ப் ‘போலிச் செய்தி’ என்று வர்ணித்துள்ளார். வருமானத்தை விட தமக்கு இழப்பு அதிகம் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தது, வரி விதிக்கப்படாததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் தனிப்பட்ட நிதி கணக்குகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதற்கான சட்டரீதியான தேவை இல்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனை அடுத்து அந்தப் பொறுப்பில் இருந்த அனைவரும் தங்கள் நிதி தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளனர். டிரம்ப் மட்டுமே இதுவரை அந்த வழக்கத்துக்கு மாறாகச் செயல்பட்டுள்ளார்.

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை