Header Ads

மெக்சிகோ மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி

மக்கோசிகோவில் மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பெண்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி குண்டுகள் துளைத்த உடல்கள் மீட்கப்பட்டதாக அரச வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜலிஸ்கோ என்ற குற்றக்கும்பல் ஒன்று ஊடுருவும் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த மதுபான விடுதியில் நடனமாடும் நான்கு பெண்களே கொல்லப்பட்டிருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொலைகளுக்கான காரணம் தெரியாதபோதும் போதைக் கடத்தலுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மெக்சிகோவில் அதிக வன்முறை கொண்ட மாநிலமாக குவானாஜுவாடோ அண்மைய ஆண்டுகளில் மாறியுள்ளது. எனினும் இங்குள்ள குற்ற கும்பல் தலைவன் ஒருவன் கடந்த ஓகஸ்ட் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் இங்கு வன்முறைகள் குறையும் என்று உள்ளுர் நிர்வாகம் நம்பியது.

எனினும் அந்தத் தலைவனின் இடைவெளியை நிரப்புவதில் குற்ற கும்பலுக்குள் ஏற்பட்டிருக்கும் மோதலால் வன்முறை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.