யெமன் போர் தரப்புகள் கைதிகள் பரிமாற்றம்

யெமனில் தொடரும் உள்நாட்டுப் போரில் சம்பந்தப்பட்டுள்ள இருதரப்பும் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுமார் 1,000 கைதிகளைப் பரிமாற்றம் செய்ய இணங்கியுள்ளன.

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற ஒரு வார அமைதிப் பேச்சைத் தொடர்ந்து அந்த முடிவு எட்டப்பட்டது. யெமன் அரசாங்கம், ஹூத்தி கிளர்ச்சி இயக்கத்தை எதிர்த்து கடந்த 5 ஆண்டுகளாகப் போராடி வருகிறது.

உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்து, கைதிகளின் பரிமாற்றம் பெரிய அளவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

அமைதிக்கான பாதையில் அது மேலும் ஒரு படியாக அமையும் என்று நம்புவதாக, யெமனுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறப்புத் தூதர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறினார்.

யெமன் போர் பிராந்திய சக்திகளான சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையிலான மறைமுக மோதலாகவே பார்க்கப்படுகிறது.

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை