கபடி பயிற்றுவிப்பாளராக நிந்தவூரிலிருந்து 14 பேர் தெரிவு

இலங்கை கபடி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கபடி பயிற்றுவிப்பாளர் தரப்படுத்தல் மற்றும் புதிய பயிற்றுவிப்பாளர் பதிவு மற்றும் தேசிய அணிக்கான பயிற்றுவிப்பாளர் தெரிவுகளில் நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து 14 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த (06) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நேர்முகப்பரீட்சை மற்றும் பயிற்றுவிப்பாளர் தரப்படுத்தலில் ஏ தரத்திற்கு நிந்தவூரில் இருந்து நான்கு(04) பேரும், டி தரத்திற்கு 10 பேரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.அனஸ் அஹமட், இலங்கை கபடி சம்மேளனத்தின் உப தலைவரும்,

அம்பாறை மாவட்ட கபடி சம்மேளனத்தின் செயலாளரும், கல்முனை சாஹிரா கல்லூரியின் ஆசிரியருமான எஸ்.முஹம்மட் இஸ்மத், தேசிய கபடி அணி வீரரும், பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான எம்.ரி. அஸ்லம் சஜா, உடற்கல்வி ஆசிரியர் ஏ.ஹலீம் அஹ்மத் ஆகியோர் ஏ தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் தரம் டி தரத்திற்கான 10 புதிய பயிற்றுவிப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் டி தரச் சான்றிதழ்களும் மேலங்கிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த டி தர பயிற்றுவிப்பாளர்களில் எம். ஜெம்ஸித், முஹம்மட் சுபான், நிஷாத், நிப்றாஸ், மாஹிர், றிஸ்னி, முஹம்மட் றிஸ்மி, சறோஸ், அஹமத் நஸ்மி மற்றும் நஸீம் உள்ளிட்ட 10 புதிய கபடி பயிற்றுவிப்பாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

(நிந்தவூர் குறூப் நிருபர்)

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை