உலகளாவிய உயிரிழப்பு 1 மில்லியனை தொட்டது

சீனாவில் தோன்றி ஓர் ஆண்டுக்கும் குறைவான காலத்திற்குள் உலகெங்கும் பரவியுள்ள கொரொனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.

இந்தப் பெருந்தொற்று உலகப் பொருளாதாரத்தை பாதித்து, பூகோள அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, இந்திய சேறிகள் மற்றும் பிரேசில் காடுகள் தொடக்கம் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரான நியூயோர்க்கிலும் உயிர்களை காவுகொண்டது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவின்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 33,018,877 ஆக உயர்ந்ததோடு உயிரிழப்பு 1,000,009 ஆக அதிகாரித்ததாக உத்தியோகபூர்வ தரவுகளை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 200,000க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதோடு இதற்கு அடுத்து பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் பிரிட்டன் நாடுகளில் அதிக உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து ஒன்றை கண்டு பிடிப்பதற்கான முயற்சிகள் உலகெங்கும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை