அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிப்பதில் சர்ச்சை

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிக்கான வெற்றிடத்தை நிரப்ப ஜனாதிபதி டொனால் டிரம்ப் செய்திருக்கும் நியமனம் குறித்து சர்ச்சை நீடித்து வருகிறது. அதுகுறித்த முடிவு அடுத்த மாதம் 12ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான 48 வயது ஏமி கோனி பேரட் என்பவரையே டிரம்ப் அந்தப் பதவிக்கு முன்மொழிந்துள்ளார். கருக்கலைப்புக்கு எதிரான போக்கைக் கொண்ட அவர், துப்பாக்கி தொடர்பான உரிமைகளை ஆதரித்து வருகிறார்.

ஏமியின் உத்தேச நியமனம் பற்றிய செய்தியால் கருக்கலைப்பு உரிமை, கட்டுப்படியான சுகாதாரப் பராமரிப்புச் சட்டம் ஆகியவை பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது. அந்தச் சட்டம் மீட்டுக்கொள்ளப்படுவதை அவர் ஆதரிப்பார் என டிரம்ப்பின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

அப்படி நடந்தால் சுமார் 20 மில்லியன் அமெரிக்கர்களின் சுகாதாரப் பராமரிப்பு கேள்விக்குறியாகும்.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை காத்திருக்குமாறு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடல் தெரிவித்துள்ளார்்.

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை