ஆப்கான் அரசுடனான அமைதி பேச்சுக்கு தலிபான்கள் தயார்

கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தலிபான்கள் நேற்று அறிவித்துள்ளனர்.

இந்த இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதில் சுமார் 400தலிபான் கைதிகளின் விடுதலை தீர்க்கமான ஒன்றாக இருந்து வந்த நிலையில் அந்தக் கைதிகளை விடுவிக்க ஆப்கான் அரசு தரப்பின் மாநாட்டில் ஒப்புதல் கிடைத்துள்ளது. 

“எமது நிலைப்பாடு தெளிவானது. கைதிகளின் விடுதலை பூர்த்தியானால், ஒரு வாரத்திற்குள் ஆப்கான் உள்ளக பேச்சுவார்த்தைக்கு நாம் தயார்” என்று தலிபான் பேச்சாளர் சுஹைல் ஷஹீன் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்ட பேச்சுவார்த்தை கட்டாரின் டோஹாவில் நடைபெறும் என்று ஷஹீன் குறிப்பிட்டுள்ளார்.

“400 தலிபான் கைதிகளையும் விடுவிக்கும் நடவடிக்கையை இன்னும் இரண்டு நாட்களில் ஆப்கான் அரசு ஆரம்பிக்கும்” என்று தேசிய பாதுகாப்பு கௌன்சில் பேச்சாளர் ஜாவித் பாசில் நேற்று தெரிவித்துள்ளார்.

Tue, 08/11/2020 - 16:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை