ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம்: பத்திரிகை உரிமையாளர் கைது

ஹொங்கொங்கின் பெரும் தொழில் அதிபரான ஜிம்மி லாய், அவரது பத்திரிகை அலுவலகங்களில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவினால் கடந்த ஜூன் மாதம் அமுல்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் மிக முக்கிய புள்ளியாக அவர் உள்ளார். ஜனநாயக ஆதரவு குரல் எழுப்புவதில் முன்னணியில் இருப்பவரான ஜிம்மி லாய், கடந்த ஆண்டு ஹொங்கொங்கில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் ஆதரவு வெளியிட்டிருந்தார்.

71வயதான லாய் பிரிட்டன் நாட்டு பிரஜையும் ஆவார். சட்டவிரோதமான ஒன்றுகூடல் மற்றும் அச்சுறுத்தலில் ஈடுபட்டதாக கடந்த பெப்ரவரியில் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். எனினும் அவருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டது.

ஜிம்மி லாய் கலகத்திற்கு ஆதரவு அளிப்பவர் என்றும் அவரது பத்திரிகை வெறுப்புணவர்வு, வதந்தி மற்றும் சீன தலைநிலம் மற்றும் ஹொங்கொங் நிர்வாகத்திற்கு எதிராக பல ஆண்டுகளாக பாதகமான செய்திகளை பரப்பியதாகவும் சீன அரச பத்திரிகையான ‘கிளோபல் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.    

இதன்போது அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

பெரும் அளவான பொலிஸாரும் அவரது ஆப்பிள் டெய்லி பத்திரிகை அலுவலகத்திற்குள் நேற்று சோதனை இட்டனர். வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்தது மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளில் 39 தொடக்கம் 72 வயதுக்கு இடைப்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர். 

Tue, 08/11/2020 - 16:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை